தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொள்ளை: நால்வர் கைது
In இலங்கை December 14, 2020 3:18 am GMT 0 Comments 1399 by : Yuganthini

வாழைச்சேனை- புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த நான்கு நோயாளிகள், கொள்ளை சம்பவமொன்று தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் சிலவற்றை களவாடியுள்ளதாக வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரினால் இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த சந்தேகநபர்களின் தனிமைப்படுத்தல் செயற்பாடு கடந்த 12ஆம் திகதி நிறைவடைந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் மஸ்கெலிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.