தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு (மாகாணங்களுக்கு இடையில்) சலுகை!
In இலங்கை November 10, 2020 6:23 am GMT 0 Comments 1414 by : Jeyachandran Vithushan

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டணத் தள்ளுபடியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை பேருந்து உரிமையாளர்கள் புறக்கணித்துள்ள நிலையில் பின்வரும் நிவாரணங்களை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதன்படி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிபதற்கான கட்டணங்கள், தாமதக் கட்டணங்கள், ஒப்பந்தக் கட்டணங்கள், பதிவுப் புத்தகத்துக்கான கட்டணங்கள், அனுமதிப்பத்திரத்துக்கான ஒப்புதல் கட்டணங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கல் கட்டணங்கள் ஆகியவை நீக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.