தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்றுவந்த இடங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுப்பு
In இலங்கை November 22, 2020 8:01 am GMT 0 Comments 1619 by : Dhackshala

ஐ.டிஎச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான பெண் சென்றிருந்த இடங்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐடிஎச் மருத்துவமனையில் இருந்து தமது இரண்டரை வயதான குழந்தையுடன் குறித்த பெண் தப்பிச் சென்றார்
எஹெலியகொட யாய வீதியில் உள்ள அவரது இல்லத்தில் குழந்தை மாத்திரம் மீட்கப்பட்டதையடுத்து, இரண்டு தினங்களாக அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு எஹெலியகொடயில் உள்ள பிரதேச மக்களால் அவர் பிடிக்கப்பட்டு சுகாதார தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களாக சென்ற இடங்களின் வழிதடங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.