தமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல்!

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து இதுவரை 127.66 கோடி ரூபாய் கைபற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று(வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஏப்ரல் 18ம் திகதி தமிழகத்தில் தேர்தல் நடைப்பெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி மொத்த வாக்காளர்கள்.
அதில் 2,95,94,923 ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் 3,02,69,45 மேலும் 5790 மூன்றாம் பாலினத்தவர்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் 14,10,745 வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை தவிர ஆதார் அட்டை நேற்று வரை 19,17,471 வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
தமிழகத்தில் 127.66 கோடி ரூபாய் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 50.03 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் உரிய அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட 98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.