தமிழகத்தில் எதிர்வரும் 2 நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு
In இந்தியா November 15, 2020 11:24 am GMT 0 Comments 1400 by : Dhackshala

தமிழகத்தில் எதிர்வரும் 2 நாட்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.