தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை கிடையாது – எடப்பாடி பழனிசாமி
In இந்தியா December 29, 2020 12:08 pm GMT 0 Comments 1463 by : Jeyachandran Vithushan

தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனவும், கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை சென்றிருந்த நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தைப் பொருத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், அதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் ஓய்வு பெறும் வயதில் அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறிய முதலமைச்சர், கமல், நடிப்பில் பெரிதாக இருந்தாலும் அரசியலில் அவர் பூஜ்யம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் திரையரங்குகளை முழுமையாகத் திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தன்னைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.