தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு இல்லை – இராதாகிருஷ்ணன்
In இந்தியா January 20, 2021 10:40 am GMT 0 Comments 1361 by : Dhackshala

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 16ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராதாகிருஷ்ணன், “கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதேபோல் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போட யாருக்கும் மறுப்பும் தெரிவிப்பதில்லை.
தாமாக முன்வந்து தடுப்பூசி போடுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துகிறோம். சிலருக்கு பயம் வருவது இயல்புதான். இதில் விழிப்புணர்வு மிக முக்கியமாகும்.
பொதுமக்கள் எல்லோருக்கும் நாங்கள் தடுப்பூசி போடவில்லை. சுகாதார முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. ஏனைய மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிகமான பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
பொதுமக்களும் தடுப்பூசி போடலாம். அறிவித்தால் ஒரே நாளில் மருந்து காலியாகி விடும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.