பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் திருப்பூர் (2ஆம் இணைப்பு)
In இந்தியா April 19, 2019 5:02 am GMT 0 Comments 2382 by : Yuganthini

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் 95.37 சதவிகித அளவில் தேர்ச்சிப்பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
ஈரோடு 95.23 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று 2ஆம் இடத்தையும், பெரம்பலூர் 95.15 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 இலட்சத்து 88 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்கள் கடந்த மாதம் பரீட்சை எழுதினர்.
அதனைத் தொடர்டந்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் நிறைவடைந்தன. இந்நிலையிலேயே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்தவகையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது.
தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. அரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.inin ஆகிய இணையதளங்களில் அனைத்து பரீட்சார்த்திகளும் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் பரீட்சார்த்திகள், பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் ஊடாகவும் மதிப்பெண்னை பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென அரச தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை நாளை காலை 9 மணி முதல் 26ஆம் திகதி வரை தங்கள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகி மார்ச் 19ஆம் திகதி முடிந்தது. அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் மார்ச் 29ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.