தமிழகத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

தமிழகத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய கணக்கெடுப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி 2.2 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பான நாட்டில் தற்போதைய வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.
இதற்கு முன்பு 2011-12இல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இப்போது 6 ஆண்டுக்கு பின்னர் 2017-18 நிதி ஆண்டில் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் தேசிய அளவிலும் ஒவ்வொரு மாநில அளவிலும் வேலை வாய்ப்பின்மை மிகவும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய அளவில் 6 ஆண்டுக்கு முன்பு வேலை வாய்ப்பின்மை 2.3 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி வேலை வாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது முந்தைய அளவை விட 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் தான் வேலை வாய்ப்பின்மை மிக அதிகமாகவுள்ளது. அங்கு 6 ஆண்டுக்கு முன்பு இதன் சதவீதம் 6.7 ஆக இருந்தது. இப்போது 11.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் அரியானா உள்ளது. அங்கு 2.8 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை அதிகம் இல்லாத மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 1.5 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 3.3 சதவீதமாக இருக்கிறது.
அதேபோல மராட்டிய மாநிலத்தில் 1.0 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 4.5 சதவீதமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.