தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருந்துகள் ஆந்திராவில் பறிமுதல்
In இந்தியா January 16, 2021 3:29 am GMT 0 Comments 1337 by : Jeyachandran Vithushan

வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்கு சொந்தமான 5 பேருந்துகளை வேலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் எதிரொலியாக தமிழகத்தைச் சேர்ந்த 16 அரசுப் பேருந்துகள், 7 தனியார் பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகள் ஆந்திர மாநிலத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து இரு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 பேருந்துகளும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டன.
எனினும், அவற்றின் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து ஆந்திரத்திற்குச் சென்ற 16 தமிழக அரசுப்பேருந்துகள், 7 தனியார் பேருந்துகளையும் அம்மாநில அதிகாரிகள் குப்பம், பலமனேரி, புத்தூர், சித்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.