தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு- முக்கிய பிரபலங்கள் உட்பட 42 பேருக்கு விருது!

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் 42 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உட்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விருது அறிவிக்கப்பட்டோர் விபரங்கள் வருமாறு,
கலைமாமணி விருது பெறும் நடிகர்கள்
ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
கலைமாமணி விருது பெறும் நடிகைகள்
பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோருக்கும், நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்
இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள்
கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.
கலைமாமணி விருது பெறும் இயக்குநர்கள்
கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நான்கு இயக்குநர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.
கலைமாமணி விருது பெறும் சின்னத்திரை நட்சத்திரங்கள்
நடிகர் நந்தகுமார், நடிகைகளான சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
இதனைவிட, ஸ்டண்ட் மாஸ்டர்களான ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிற்றர் அண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்களான காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி.பிரபாகர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.