தமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்
In இலங்கை April 17, 2019 10:34 am GMT 0 Comments 2247 by : Dhackshala
தமிழ் தலைமைகள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை, கடந்த நான்கு வருடங்களாக வீணாக்கியதன் விளைவாகவே தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாது, இன்னும் நீடித்து வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தினார்.
வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “எமது பிரதேசத்தின் அபிவிருத்தியையும் தீர்வையும் காண தமிழ் தலைமைகள் தவறிவிட்டனர்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தோம். இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாக எங்களுடைய பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் என நினைத்து மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
ஆனால் எங்களுடைய அரசியல் தலைவர்கள் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்காக பயன்படுத்தவில்லை என்பதே கவலையான விடயம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்ச
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத