தமிழர் பகுதிகளில் 44 வீதம் வன இலாகா திணைக்களத்திடம்- சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை!

வன இலாகா திணைக்களம் தமிழர் பகுதிகளில் 44 வீதத்தை தம்வசப்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழ் மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கால்நடை பண்ணையாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் கால்நடைகளைத் தடைசெய்து அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழர் பகுதிகளில் மணல் அகழ்வு ஒரு மாபியா போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இதனைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.