தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் கைது
In இலங்கை November 27, 2020 4:01 am GMT 0 Comments 2050 by : Yuganthini

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை, ஏறாவூரில் 23பேரும் களுவாஞ்சிக்குடியில் 3பேரும் குறித்த செயற்பாடுகளுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் அணியை சேர்ந்த முக்கிய உறுப்பினரும் இதில் உள்ளடங்குகின்றார்.
மேலும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர்கள் தடுத்துவைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சம்பவம் அறிந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.