தமிழ்நாட்டு பட்டியலில் பிற மாநில மாணவர்களின் பெயர்கள் எவ்வாறு வந்தது? – ஸ்டாலின் கேள்வி
In இந்தியா November 18, 2020 9:47 am GMT 0 Comments 1579 by : Dhackshala

மருத்துவ படிப்பு தொடர்பான தமிழ்நாட்டு பட்டியலில் ஏனைய மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது எப்படி? என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, அதை உடனடியாக மாற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ பட்டியலில் 5ஆம் இடத்தில் இருக்கிறார் எனவும் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலுங்கானா பட்டியலிலும் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.