தமிழ் சினிமா உள்ளவரை மகேந்திரனுக்கு தனி இடம் இருக்கும்: ரஜினிகாந்த்
In சினிமா April 2, 2019 12:52 pm GMT 0 Comments 2002 by : adminsrilanka

மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரான மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகேந்திரனின் உடல் பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே சினிமா பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.
நடிகரும், மகேந்திரனின் நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் மகேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மகேந்திரனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு சினிமாவை தாண்டிய நட்பு உள்ளது. எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும்” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த