தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ஊடகச் சந்திப்பு
In இங்கிலாந்து April 29, 2019 2:21 pm GMT 0 Comments 5196 by : S.K.Guna

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் (TSSA) ஐக்கிய ராஜ்ஜியம் நடத்தும் மாபெரும் உதைபந்தாட்டத் திருவிழா மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.
இந்நிலையில் விளையாட்டுப் போட்டிக்கள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை5.30 அளவில் Northolt Village Community Centre, Northolt UB5 6BD என்ற முகவரியில் நடைபெற்றது.
1 நிமிட அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தி இவ்வாண்டு நடைபெறும் 27 ஆவது உதைபந்தாட்டத் திருவிழா பற்றி விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து கேள்வி பதிலுக்கான நேரம் வழங்கப்பட்டு சபையில் இருந்தவர்களின் கேள்விகளுக்கு சங்கத்தின் செயலர் யோகா தினேஷ் பதிலளித்தார்.
கடந்த ஆண்டுகள் போலவே உதைபந்தாட்டத் திருவிழா இம்முறையும் மே மாதம் 06 ஆம் திகதி வங்கி விடுமுறை நாளில் wimbledon common extensions Robin hood way , Wimbledon, London SW15 3QF என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
இந்த உதைபந்தாட்டத் திருவிழாவில் இலங்கையில் உள்ள பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 80க்கும் அதிகமான அணிகள் பங்கேற்கவுள்ளன.
மேலும் கரப்பந்தாட்டப் போட்டிகள், மென்பந்துத் துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், தடகள விளையாட்டுப்போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.