தமிழ் மக்களுடைய போராட்டம் பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து வேறுபட்டது – செல்வம்
In இலங்கை May 3, 2019 5:44 am GMT 0 Comments 2195 by : Dhackshala

தமிழ் மக்களுடைய போராட்டம் பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து வேறுபட்டதென நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) அமைச்சரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அண்மையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தமது வருத்தங்களை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சருடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களை பாதுகாக்க வேண்டுமெனவும் மக்கள் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் சுமுகமான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
தமிழ் மக்களுடைய போராட்டம் பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து வேறுபட்டதென தெரிவித்தார். அவர்கள் தமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கோரியே போராடினார்களென்றும் அப்போராட்டத்திலே இது போன்ற கொடூரமான தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தமது மதத்தலங்களுக்கு சென்று வந்தார்கள் என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.