தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20வீத அரசு வேலை வாய்ப்பு- ஆளுநர் ஒப்புதல்

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புக்களில் 20 வீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறைப்படுத்தும் சட்டத் திருத்த வரைபுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளையும், 10ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் தமிழக சட்ட மன்றத்தில் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டது.
இது, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் ஏறக்குறைய எட்டு மாதங்களாக, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்கள் பெரிதும் பயனடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.