‘தர்பார்’இல் சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் வசனம்
In சினிமா April 9, 2019 9:19 am GMT 0 Comments 2154 by : adminsrilanka

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘தர்பார்’ திரைப்பட போஸ்டரில், ரஜினி பேசுவது போன்ற பஞ்ச் வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
“நான் நல்லவனாக இருக்கவேண்டுமா அல்லது மோசமானவனாக இருக்கவேண்டுமா என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்” என்ற பஞ்ச் வசனம் கிறுக்கலாக போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ளது. அதில், பொலிஸ் வேடத்தில் ரஜினி நடிப்பதைப் போன்று ஒளிப்படம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஒளிப்படப்பிடிப்பில் (Photo shoot) ரஜினி, பொலிஸ் வேடத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன.
இப்படத்தில், ரஜினி ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஐ.பி.எஸ் போஸ்டரில் அவருக்குப் பின்னால் இரண்டு துப்பாக்கிகள் உள்ளன. அதேநேரம் ஒரு கைவிலங்கு திறந்த நிலையிலுள்ளது. பொலிஸ் நாய் ஒன்றும் உள்ளது. பொலிஸ் பெல்ட், தொப்பி, தோளில் மாட்டும் batch போன்றவைகளும் உள்ளன.
இத்திரைப்படம் மும்பை கதைக்கள பின்னணியில் உருவாகவுள்ளது. இதனை ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது. அதில் ஒரு வரைபடமும், கட்டடமும் இடம்பெற்றுள்ளது. குற்றம் நடைபெறும் இடங்களில் ஒட்டப்படும் மஞ்சள் நிற அடையாள பட்டியும் உள்ளது. அத்தோடு, மும்பை என்ற வார்த்தையும் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சந்தோஷ் சிவன் இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்கின்றார். அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரஜினி இரசிகர்களுக்கு இத்திரைப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.