தற்கொலைத் தாக்குதலுக்குள்ளான சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்
In கிழக்கு மாகாணம் May 8, 2019 5:03 pm GMT 0 Comments 2448 by : Litharsan
பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை, பிரதம திருத்தந்தையான ரொஷான் மகேஷன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
கொடிய பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்த தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, தேவாலயத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை உள்ளிட்ட திருத்தந்தைகளுக்கும் பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
இந்த விஜயத்தில், அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்
-
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 787 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறி
-
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ப
-
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால், அங்கு கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும் எ
-
இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்க
-
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக
-
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி
-
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதா
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊ