தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு
In ஆசிரியர் தெரிவு April 23, 2019 11:07 am GMT 0 Comments 2555 by : Jeyachandran Vithushan
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட எட்டு வெவ்வேறு தாக்குதல்களில் 321 பேர் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் சீற்றத்தை உண்டாக்கியுள்ள இந்த தாக்குதல்களுக்கு தெளஹீத் ஜமாத் எனும் உள்ளூர் இஸ்லாமியக் குழுவே காரணமென இலங்கை தெரிவித்திருந்தது.
இதேவேளை இந்த தாக்குதல்களுக்கு ISIS தீவிரவாத அமைப்பின் முன்னைய தாக்குதல்களுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல்களுக்கு இலங்கையை சேர்ந்த குழுவொன்று காரணமாக இருந்தாலும் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புக்களின் அதிநவீன தொழில்நுட்ப பின்னணியில் நிச்சயமாக ஐஸ்ஐஸ் அமைப்பின் ஈடுபாடு உள்ளடக்கப்பட்டிருக்குமென சர்வதேச வல்லுனர்களும் தெரிவித்திருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும்
-
ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிய
-
யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு
-
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)