அறிக்கை குறித்து ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தினார் மஹிந்த!
In இலங்கை May 3, 2019 2:36 am GMT 0 Comments 1980 by : Dhackshala

நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து முன்ளாள் பாதுகாப்பு துறை பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரியப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர்.
இதன்போது எதிர்க்கட்சித்தலைவர் இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் கூறியதாக, அந்த சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தங்களது அனுபவத்தை பயன்படுத்தி தற்போதைய சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்கலாம் என்ற பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அறிக்கையை தயாரித்து வழங்குமாறு முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 28ம் திகதி கோரி இருந்தார். இந்நிலையிலே அந்த அறிக்கை நேற்று அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப