தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 ஆப்கானிய வீரர்களும் முன்னாள் பாதுகாப்புத் தலைவரும் கொலை!
In உலகம் February 7, 2021 10:49 am GMT 0 Comments 1320 by : Jeyachandran Vithushan

வடக்கு ஆப்கானிஸ்தான் குண்டூஸ் மாகாணத்தில் தலிபான் இயக்கத்தின் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கானிய வீரர்களும் தேசிய பாதுகாப்பு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அலியாபாத் மாவட்டத்தில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியிலேயே இந்த தாக்குதல் நேற்று (சனிக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
2020 செப்டெம்பர் மாதம் கட்டார் தலைநகர் டோஹாவில் ஆப்கான் அரசாங்கத்திற்கும் தலிபான் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இருப்பினும் ஆப்கானிய ஆயுதப்படைகளும் தலிபான்களும் நாடு முழுவதும் தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.