தவான், ஷ்ரேயாஸ் அரைசதம்: பெங்களூரை வீழ்த்தி ‘பிளே-ஓப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி
In கிாிக்கட் April 28, 2019 2:40 pm GMT 0 Comments 2435 by : Jeyachandran Vithushan

பெங்களூர்க்கு எதிரான போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்று டெல்லி அணி பிளே-ஓப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 46 லீக் போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தவான் (50), ஷ்ரேயாஸ் அய்யர் (52), ரூதர்போர்டு (13 பந்தில் 28 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 188 ஓட்டங்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் களம் இறங்கியது. விராட் கோலி நிதானமாக விளையாட பார்தீவ் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் அணியின் ஓட்டம் 5.5 ஓவரில் 63 ஓட்டங்களாக இருக்கும்போது பார்தீவ் பட்டேல் 20 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த டுபே 16 பந்தில் 24 ஓட்டங்கள் அடித்தார். இவரையும், கிளாசனையும் அமித் மிஸ்ரா ஒரே ஓவரில் வீழ்த்தினார். அத்துடன் பெங்களூர் அணிக்கு தோல்வி உறுதியானது.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் பெங்களூர் அணியினால் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் டெல்லி கப்பிட்டல்ஸ் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் டெல்லி கப்பிட்டல்ஸ் 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஓப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.