தாண்டவ் படக்குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு!
In சினிமா January 25, 2021 10:47 am GMT 0 Comments 1172 by : Krushnamoorthy Dushanthini

தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஒரு அமைப்பு அறிவித்துள்ளது.
ஹிந்தியில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சயீப் அலிகான். இவர் தாண்டவ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். பர்கான் அக்தர் தயாரித்துள்ளார். தாண்டவ் வெப் தொடரில் இந்து மத கடவுளை அவமதித்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நாட்டில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களில் நடிகர் சயீப் அலி கான், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘தாண்டவ்’ வெப் தொடர் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.