தாமாக முன்வருபவர்களுக்கே கொரோனா தடுப்பூசி – இராதாகிருஷ்ணன்
In இந்தியா January 12, 2021 6:38 am GMT 0 Comments 1431 by : Krushnamoorthy Dushanthini

தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முதல் கட்டமாக புனேவிலிருந்து தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும் தடுப்பூசி மருந்துகள் 10 நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
தமிழகத்துக்கு முதற்கட்டமாக 5.56 இலட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இன்று காலை வரவுள்ளன. சீரம் நிறுவனத்திடம் இருந்து 5 இலட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வருகின்றன. பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வருகின்றன.
கொரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல. தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும். 30 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.