தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை?

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குறித்த காதலர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிட்கொயின் முதலீட்டாளரான சாட் எல்வர்டோஸ்கி என்பரும் அவரது தாய்லாந்து நாட்டுக் காதலியான சுப்ரானே தெப்பெட் ஆகிய இருவருமே இவ்வாறு தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
கோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தில் கடலுக்குள் கொன்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் உள்ளதால் தாய்லாந்தின் இறையாண்மையை மீறவில்லை என சாட் எல்வார்டோஸ் கி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.