தாராவியில் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகாத நாள் பதிவானது!

மும்பையின் தாராவியில் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், இன்று யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி காணப்படுகிறது.
அங்கு, கடந்த ஏப்ரல் முதலாம் திகதி கொரோனா தொற்று ஏற்பட்டது. மக்கள் தொகை அடர்த்தி அதிகம் என்பதால் தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.
எனினும், துரிதமாகச் செயற்பட்ட மத்திய, மாநில அரசுகள் தாராவியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா பரவிய ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து முதன்முறையாக தாராவியில் இன்று புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.