திக்கோடையில் யானை தாக்கி பெண் படுகாயம்!
In இலங்கை February 12, 2021 4:48 am GMT 0 Comments 1227 by : Vithushagan

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
திக்கோடை புதிய 50 வீட்டுத்திட்ட கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது வீட்டுக்கு அருகாமையில் தாயும் தனது மகளும் வெளியில் செல்லும்போது காட்டு யானை துரத்தி வந்து தாக்கியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த தாயார் அயலவர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது திருமேனி தமிழ்மலர் என்ற மூன்று பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுத் திட்டங்களை சுற்றி அடர்ந்த காடுகளும் இருப்பதனால் மக்கள் வசதிகள் இன்றி கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானையானது ஒவ்வொரு நாளும் வருவதாகவும் தினமும் இரவு,பகல் வேளைகளில் அச்சத்துடனேயே வசித்துவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.