திங்கட்கிழமை முதல்பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை !
In இலங்கை November 21, 2020 7:46 am GMT 0 Comments 1422 by : Jeyachandran Vithushan

ஆபத்தான வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இருப்பினும் இதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு தேவையான சுகாதார நடைமுறைகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவை கிடைக்கப்பெற்ற பின்னர் சேவையை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.