திம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு
In இலங்கை April 17, 2019 10:14 am GMT 0 Comments 2443 by : Dhackshala
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
24ம் இலக்க தேயிலை மலையிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை குறித்த சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த தேயிலை மலையில் தொழில் செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தையொன்று இறந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்ததையடுத்து உயிரிழந்த சிறுத்தையை மரண பரிசோதனைக்காக வனவிலங்கு அதிகார சபைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்துசென்றுள்ளதாகவும் காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச்சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்ச
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத