தியாகிகளை நினைவுகூருவதில் பாரபட்சம் காட்டக்கூடாது: பிரியங்கா
In இந்தியா April 7, 2019 5:03 am GMT 0 Comments 2362 by : Yuganthini

நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தியாகிகளை நினைவுகூருவதில் அல்லது அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாதென காங்கிரஸின் உத்தரப் பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது பிரியங்கா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் தேர்தலொன்று அறிவிக்கப்பட்டாலே தேசப்பற்று என்ற வார்த்தையை பயன்படுத்தி, தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
தேசப்பற்று என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, தங்களுக்கு இருக்கும் வாக்குரிமையை ஆயுதமாக பயன்படுத்துவது ஆகும்.
இதேவேளை நாட்டிற்காக சேவை புரிந்த தியாகிகளுக்கு பாகுபாடின்றி ஒரே விதமாக மரியாதை செலுத்த வேண்டும்.
அந்தவகையில் பா.ஜ.க.வினர் தேசப்பற்று உடையவர்கள் என்பது உண்மையென்றால் காங்கிரஸின் முன்னாள் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்” என பிரியங்கா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பே
-
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின்
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்
-
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மான
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்கிறார். துணை ஜனாதிபதியாக இந்திய
-
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும் என இலங்கைத் தொழிலாளர் காங்க
-
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளத
-
இலங்கையில் மருந்து பொருளாக, கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் என பெங்கமுவே நாலக்க தேரர் வலியுறுத்திய