திராவிட கழகத்தினர் மீது தாக்குதல்:12 பேர் கைது
In இந்தியா April 5, 2019 8:18 am GMT 0 Comments 1977 by : adminsrilanka

இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்து மாநகர நிர்வாகிகள் 12 பேரை பொலிசார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர்.
இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக திராவிடர் கழகத்தினர் மீது செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி தாக்குதல் குறித்து தெரியவருதாவது, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகின்றது. அந்த வகையில் திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தாராநல்லூர் அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதன்போது திராவிடர் கழகத்தினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தக்கூட்டத்தில் இந்துக்களுக்கு எதிராகவும், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மேடையின் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் திராவிடர் கழகத் தலைவரின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.