திருகோணமலையிலும் அதிகரிக்கும் கொரோனா: இரு பகுதிகள் முடக்கப்பட்டன!

திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் உடன் அமுலுக்கு வரும்வகையில் இரு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதியும் ஜின்னா நகரில் ஒரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இந்த முடக்கம், இன்று காலை ஆறுமணி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதிகளின் பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தனிமைப்படுத்தல் பகுதிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.