திருகோணமலையில் பதற்றம் தணிந்தது (2ஆம் இணைப்பு)
In இலங்கை April 29, 2019 11:35 am GMT 0 Comments 2809 by : Yuganthini

திருகோணமலை நீதிமன்ற வீதியில் அநாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்குரிய எந்ததொரு பொருளும் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதியில் சுமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் இன்று காலை முதல் அநாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினால் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடத்தினர். இதனால் போக்குவரத்தும் சுமார் 3 மணிநேரம் தடைப்பட்டிருந்தது.
ஆனாலும் சந்தேகத்துக்குரிய எந்ததொரு பொருளும் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதி வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் அநாதரவாக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளினால் பதற்றம்
திருகோணமலை நீதிமன்ற வீதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அநாதரவாக நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் குறித்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் மற்றும் குண்டையை செயலிழக்கச் செய்யும் பிரிவிரினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.