திருகோணமலையில் நகைக் கடையொன்றில் கொள்ளை!
In இலங்கை February 11, 2021 6:27 am GMT 0 Comments 1203 by : Vithushagan
திருகோணமலை வடகரை வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.