திருகோணமலையில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனாத் தொற்று!

திருகோணமலையில் மேலும் ஒன்பது புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, திருகோணமலையின் தொற்றாளர்களது எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று மூதூரில் இருவரும் திருகோணமலையில் ஏழு பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை நகரில் இதுவரை 64 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மூதூரில் 27 பேரும் கிண்ணியாவில் எட்டுப் பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன், தம்பலகாமன் பகுதியில் ஆறு பேரும், கோமரங்கடவல மற்றும் குச்சவெளியில் தலா ஒவ்வொருவரும் சேருவில மற்றும் உப்புவெளியில் தலா மூவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.