திருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தனர்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 25ஆம் திகதி வைகுண்ட ஏகாதசியையொட்டி கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.
ஆனால் ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது என பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் கடந்த ஆண்டு முதல் ஆங்கிலப் புத்தாண்டிற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கவில்லை.
பக்தர்கள் வழக்கம்போல் சாமியை தரிசனம் செய்து சென்றனர். ஆனாலும் இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ஸ்ரீவாணி டிரஸ்ட் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் தரிசனம் செய்வதற்காக கூடுதலாக பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனத்தற்கு தயாராகியுள்ளனர்.
புத்தாண்டிற்காக தரிசனம் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வழக்கம்போல் தரிசனமே தொடரும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப