திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் தமிழக முதலமைச்சர்
In இந்தியா November 17, 2020 9:39 am GMT 0 Comments 1386 by : Yuganthini

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நேற்று (திங்கட்கிழமை) மாலை, மனைவி மற்றும் உறவினர்களுடன் திருமலைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு தங்கியிருந்து, இன்று காலையில் ஏழுமலையான் தரிசனத்தில் ஈடுபட்டார்.
இதன்போது ஆலயத்துக்கு வருகை தந்த முதலமைச்சரை வாசலில் வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள், அவரை ஆலயத்துக்குள் அழைத்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆலயத்திலுள்ள அகிலாண்டம் பகுதியில் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் எடப்பாடி பழனிசாமி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.