திவுலபிட்டி மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் 14 ஆயிரத்து 170பேருக்கு கொரோனா!
In இலங்கை November 17, 2020 3:49 am GMT 0 Comments 1359 by : Yuganthini

திவுலபிட்டி மற்றும் பேலியகொடை ஆகிய இரண்டு கொத்தணிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 61பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.