தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்- கமல்

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்றத்தைக் கொண்டுவர உழைக்க வேண்டும் என தமது கட்சியினருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “என் மகள்கள் இருவரும் பொதுக்குழுவிற்கு வருகைதர வேண்டும் என்று கேட்டனர். ஆனால், அது வாரிசு அரசியல் ஆகிவிடக் கூடாது என நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் நீதி மய்யம் ஊழலற்ற கட்சியாக உள்ளதாகக் கூறியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக நாம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.