தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது- கனிமொழி
In இந்தியா December 6, 2020 7:32 am GMT 0 Comments 1538 by : Yuganthini

தமிழகத்தில் யார் கட்சி ஆரம்பித்தாலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதென தி.மு.க.மகளிரணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
கடந்த 10 ஆண்டு காலமாக படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாமல் உள்ளனர். விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. நீலகிரியில் பச்சை தேயிலைக்கு நல்ல விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும்,அது வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை நிச்சயம் பாதிக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.