தீபாவளிக்கு தயார் செய்யப்பட்ட 5000 லீற்றர் சட்டவிரோத கசிப்புடன் மூன்று பேர் கைது!
In இலங்கை November 12, 2020 8:47 am GMT 0 Comments 1427 by : Vithushagan
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா ஹூனுகொட்ட பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 5000 லீற்றர் கசிப்புடன் மூன்று பேர் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டினையினை முன்னிட்டு குறித்த கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு போத்தல் கசிப்பு 1200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட இருந்தாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே இன்று ( வியாழக்கிழமை) குறித்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு 5100 லீற்றர், கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியன அதன் போது மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் ஹூனுகொட்டுவ பகுதியை சேர்ந்தவர்கள் என்று இவர்கள் பிணையில் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தினங்களில் நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைகள அதிகார் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.