தீர்வின்றி தொடரும் கண்ணீர் போராட்டத்தில் குண்டுவெடிப்புகளில் உயிர் இழந்தவர்களுக்கும் அஞ்சலி
In இலங்கை May 6, 2019 10:47 am GMT 0 Comments 2376 by : Yuganthini
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கண்ணீர் போராட்டம் இன்றுடன் 800 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகளில் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினரால் திருகோணமலை- கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா, “எங்களது போராட்டமானது இன்றுடன் 800ஆவது நாட்களை கடந்துள்ளதுடன் இதுவரை காலமும் பொறுப்பு வாய்ந்தவர்களிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
ஆகையால் தங்களுக்கான தீர்வினை வெளிநாட்டுத்தலையீடுகளின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசு முன்வரவேண்டும்” எனவும் நாகேந்திரன் ஆஷா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எத
-
கொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு
-
AstraZeneca’s என்ற கொரோனா தடுப்பூசியை அவசரகால பாவனைக்காக பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அனும
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை
-
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர
-
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்
-
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்
-
பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை