தீவிரவாதத்தைச் சமாளிக்க பிரான்சுடன் இணைந்து நடவடிக்கை: நியூசிலாந்து

இணையம் மூலமான தீவிரவாதத்தை சமாளிப்பதற்கு பிரான்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
ஒக்லாந்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மார்ச் 15 நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனுடன் மே மாத நடுப்பகுதியளவில் பேச்சுவார்த்தையொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையத்தின் ஊடான வன்முறை, தீவிரவாதத்தை தடுப்பதற்கான முயற்சியாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.
50 பேரின் உயிரை காவுகொண்ட கிறைஸ்ற்சேர்ச் மசூதி தாக்குல்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளம் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்
-
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 787 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறி
-
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ப
-
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால், அங்கு கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும் எ
-
இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்க
-
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக
-
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி
-
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதா
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊ