தென்கொரியாவில் வரலாற்று சிறப்புமிக்க சட்டமாற்றம்!
தென்கொரியாவில் கடந்த 66 வருடகாலமாக நடைமுறையிலிருந்த கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானதென அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1953ஆம் ஆண்டுமுதல் நடைமுறையில் காணப்படும் சட்டத்தின் பிரகாரம், தடையை மீறி கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். கருக்கலைப்புச் சிகிச்சையைச் செய்யும் மருத்துவர்களுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கருக்கலைப்பைத் தடை செய்யும் சட்டம் பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்குமென சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டு வந்தனர். இந்த நடைமுறையை ரத்துசெய்ய வேண்டுமென நீண்டகாலமாக சர்ச்சை நீடித்தது.
இந்நிலையில், அந்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அந்த சட்டத்தை மாற்றியெழுத நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை என்றால் ஜனநாயக வழிகளிலும் போராட நாம் த
-
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வர
-
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 3 விக்கெட்டுகளால் வெற
-
குவைட்டுக்கு தொழில் புரியச்சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்த
-
1000 ரூபாய் என்பது இன்னமும் மதிப்பிழந்து, 500 ரூபாய்க்கு சமனாகும் வரை அடிப்படை சம்பளம் 1000 ரூபாயாக
-
கொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற
-
இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு அனுப்ப
-
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்து
-
அரசாங்கத்தின் கோப் குழுவுக்கு (பொதுநிதி குழு) இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநா