தென் சீனக் கடலில் அமெரிக்க துருப்புக்களை சீனா அச்சுறுத்தவில்லை: அமெரிக்க இராணுவம்!

தென் சீனக் கடல் பகுதியில் பயணித்த அமெரிக்க துருப்புக்களை சீனா அச்சுறுத்தவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சீன இராணுவ விமானங்கள் பிராந்தியத்தில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி குழுவுக்கு எவ்வித இடையூறினையும் விளைவிக்கவில்லை.
இதுதொடர்பாக அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தியோடர் ரூஸ்வெல்ட் கேரியர் ஸ்ட்ரைக் குழு அனைத்து மக்கள் விடுதலை இராணுவ கடற்படை மற்றும் விமானப்படை நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்தது. எந்த நேரத்திலும் அவர்கள் அமெரிக்க கடற்படை கப்பல்கள், விமானம் அல்லது மாலுமிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி கூறுகையில், ‘சீன விமானம் அமெரிக்க கடற்படைக் கப்பல்களில் 250 கடல் மைல் (463 கி.மீ) க்குள் வரவில்லை’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.