தெற்கிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
In இலங்கை November 29, 2020 5:50 am GMT 0 Comments 1546 by : Yuganthini

தெற்கில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 266 ஆக உயர்வடைந்துள்ளதாக தெற்கு மாகாண கொவிட் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு மையத்தின் அதிகாரி சாமர மகாகமகே தெரிவித்துள்ளார்.
தெற்கு மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் தொடர்பாக சாமர மகாகமகே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 9பேர் மாத்தறை மாவட்டத்திலும் ஏனையோர் வெலிபிட்டிய, அக்குரெஸவை சேர்ந்தவர்களாவர்.
வெலிபிட்டிய பகுதியில் எட்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் காலி மாவட்டத்தில் இதுவரை 169 பேருக்கும் மாத்தறை மாவட்டத்தில் 66 பேருக்கும், ஹம்பாந்தோட்டா மாவட்டத்தில் 31 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அக்குரெஸவில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 149பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
காலி மாவட்டத்தில் 95 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 32 பேரும், ஹம்பாந்தோட்டா மாவட்டத்தில் 22 பேரும் குணமாகியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.