தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை 5 அல்லது 6 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்ப்பு- பந்துல
In இலங்கை December 7, 2020 10:18 am GMT 0 Comments 1440 by : Dhackshala

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை 5 அல்லது 6 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும் நிவாரண கொடுப்பனவையும் வழங்கியுள்ளது.
எனவே, 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை 5 தொடக்கம் 6 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.